ETV Bharat / crime

தனியார் பேருந்தும் லோடு ஆட்டோவும் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 9, 2022, 6:21 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும், லோடு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Private bus and Cargo Auto collided
தனியார் பேருந்தும் லோடு ஆட்டோவும் மோதி விபத்து

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவர் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி லோடு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிருஷ்ணன் கோயில் நோக்கி சென்ற தனியார் பட்டாசு ஆலை பேருந்தும், இவரது லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் டிரைவர் வேலுச்சாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவருடன் வந்த செல்வகுமார், தனியார் பேருந்தில் வந்த மூன்று உள்பட நான்கு பேர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் செல்வ குமார், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தால் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மோசடி விவகாரம்: சத்தமில்லாமல் சிக்கிய முன்னாள் வங்கி அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.