ETV Bharat / crime

வயிற்றில் கருவுடன் இருந்த நாய் கொலை.. சர்வதேச நாய்கள் தினத்தில் கொடூரம்.. - சிசிடிவி காட்சியின்

சர்வதேச நாய்கள் தினமான நேற்று (ஆகஸ்ட் 26) மதுரையில் கர்ப்பிணி நாயை 3 நபர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர்.

நாய்கள் தினத்தில்...கர்ப்பமுற்ற பெண் நாய் அடித்து கொலை...

author img

By

Published : Aug 27, 2022, 7:49 AM IST

Updated : Aug 27, 2022, 4:48 PM IST

மதுரை: டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு தெரு நாய்கள் சண்டையிட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மூன்று நபர்கள் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஒரு நாயின் மீது பலமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதைக் கண்ட விலங்கு நல ஆர்வலர்கள், சாய் டிரஸ்ட் நிறுவனர் மயூர் ஹசிஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த நாயின் உடற்கூராய்வு தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

அதில் அந்த நாய் நாற்பது நாட்கள் கருவுற்றிருந்ததாகவும், அந்த நாய்க்கு எந்த வெறியும் பிடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மதுரை சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE ஆகஸ்ட் 27 இன்றைய ராசிபலன்

Last Updated : Aug 27, 2022, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.