உனோவ்: உத்தரப் பிரதேசத்தின் உனோவ் மாவட்டத்தில் நியூ ஜீவன் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பெண் செவிலி (நர்ஸ்) ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து காவலர்களுக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த செவிலியின் குடும்பத்தினர், செவிலியின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்” எனப் புகார் அளித்துள்ளனர்.
இதே புகாரை செவிலியின் உறவினர்களும் அளித்துள்ளனர். இது குறித்து காவலர்கள் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “உயிரிழந்த செவிலி குடும்பத்தினரின் புகார் உள்பட 3 பேர் புகார்கள் கிடைத்துள்ளன. மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் முடிவுகள் தெரிவிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : செவிலியர் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை!