தர்மபுரி: மொரப்பூர் பூங்கா நகரில் வசிப்பவர் ஓய்வுபெற்ற மேலாளர் கண்ணன். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பியபோது வீட்டிலிருந்த பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
இது குறித்து அவர் மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, கண்ணன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மஞ்சுளா கைரேகை நிபுணர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
இதுபற்றி வீட்டின் உரிமையாளர் கண்ணன் கூறுகையில், "நான் சென்ற 7ஆம் தேதி எனது குடும்பத்தினரோடு சேலம் சென்றிருந்தேன். இன்று (ஏப்.11) மாலை நான்கு மணி அளவில் தான் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். வந்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே போய் பார்க்கும்போது அனைத்து பீரோக்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. எனது வீட்டில் சுமார் 46 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்ததது" என்றார்.
கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மொரப்பூர் காவல் ஆய்வாளர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணிவது கட்டாயம்- தர்மபுரி மாவட்ட ஆட்சியர்