கடலூர் முதுநகர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூங்கொடி மற்றும் மகள் மீனா. இவருக்கும் சோனா குப்பத்தை சேர்ந்த நம்பிராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.
மீனா கடந்த சில நாள்களாக கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து நம்பிராஜ் அவரை நேற்று (மார்ச் 16) சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் மனைவி தன்னுடன் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், மாலை நேரத்தில் மாமியார் பூங்கொடி மற்றும் மீனா ஆகிய இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்து தப்பியுள்ளார்.
இதையடுத்து கடலூர் முதுநகர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து நம்பிராஜை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் இன்று (மார்ச் 16) கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி: கடலூர் துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவி படுகொலை