திண்டுக்கல் : பழனியை அடுத்த பழைய ஆயக்குடி 6ஆவது வார்டு பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவரின் மகன் ராம்குமார். இவர் குஜராத்தில் பைனான்ஸ் நிறுவணத்தில் வேலை செய்து வந்துள்ள நிலையில் பழைய ஆயக்குடியைச் சேர்ந்த மீனா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு 2 வயதில் தர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராம்குமார் பைனான்ஸில் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பல பெண்களை ஏமாற்றி பெண்களின் வாழ்க்கையில் விபரீத விளையாட்டு விளையாடி உள்ளார்.
இவர், பல்வேறு ஊர்களுக்கு சென்று கணவன் இல்லாத பெண்கள், தனியாக இருக்கும் பெண்கள், பணத்திற்கு ஆசைப்படும் பெண்கள், ஆகியவர்களை நன்கறிந்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பது வழக்கமாக கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ராம்குமார் தனது மனைவி மீனாவை நந்தவனப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த நிலையில் சரமாரியாக அடித்து தாலியை அறுத்து நகைகளை பிடுங்கி சென்றுள்ளார்.
உடலில் காயங்களுடன் காணப்பட்ட மீனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மீனா ஆயக்குடி காவல் நிலையம் சென்று புகார் தரவே காவல் நிலையத்தில் புகார் எடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மீனா புகார் எடுக்க மறுத்த ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் இவ்வழக்கை விசாரித்து தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் மோசடி நாயகன் ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருமணத்தை மீறிய உறவால் பெண் தற்கொலை - தங்கை கணவர் கைது