கரூர் வெங்கமேடு காவல் நிலையம் அருகேயுள்ள அருகம்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கமேடு காவல் துறையினர் உடலை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்த விசாரணையின்போது கரூர் வெங்கமேடு விவிஜி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்றும், இவருக்கு ரேவதி என்ற மனைவி மற்றும் நித்திஷ் - நிர்மல் என்ற இரண்டு மகன்கள் உள்ளதும் தெரியவந்தது. இவர் கரூரில் அமைந்துள்ள தனியார் கொசு வலை கம்பெனியின் மேலாளர் என தெரியவந்தது.
மார்ச் 6 அன்று காலை, தனது மூத்த மகனுக்கு பிறந்தநாள் என்பதனால், கேக் வாங்க விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்ற குமார், நீண்ட நேரமாகிய நிலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் குமாரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், வெங்கமேடு காவல் நிலையத்திலிருந்து அருகம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரித்த போது, குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
![குற்றச் செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10904011_suicide.jpeg)
பின் குமாரின் உடலை கைபற்றிய வெங்கமேடு காவல் துறையினர், அவரது உடலை உடற்கூராய்விற்க்கு அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனின் பிறந்தநாள் அன்று தந்தை தற்கொலை செய்துகொண்டதால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கண் மருத்துவமனை பயிற்சி செவிலி திடீர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்