ETV Bharat / crime

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

author img

By

Published : Aug 22, 2022, 3:04 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்குப் பின் பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார், அப்பகுதியைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக்கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், மதுரையைச்சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளிச்செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கோரிக்கையை ஏற்று, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரித்த வழக்கு.... சிறுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.