சென்னை: அந்தமான் தீவுக்கு அருகே இந்திரா பாயிண்ட் என்ற இடத்திற்குள் நுழைந்த சிறிய ரக கப்பலில் 9 ஈரானியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையில் வைத்து அவர்களை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து, இந்திய கடற்படையினர் அவர்களை கப்பலுடன் சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் காவலர்கள், கப்பலில் போதைப் பொருள்கள், வெடிப்பொருள்கள் உள்ளதா எனச் சோதனையிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வந்த ஈரானியர்கள் 9 பேரையும், மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். தற்போது, மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையொட்டி, சென்னை துறைமுகத்தில் என்.ஐ.ஏ, ஐ.பி, மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ரா அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் துப்பாகியுடன் துறைமுகத்தை சுற்றி வளைத்துள்ளனர். வழிதவறி வந்தனரா அல்லது போதைப் பொருள் கடத்தல் கும்பலா என 9 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.