பேஸ்புக் மூலம் காதல் வலை
கேரளா மாநிலம் கும்பேளத்தைச் சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞருக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ஜீனத்திற்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் மிக நெருக்கமாக, ஜீனத்தை தேடி சுரேஷ் மங்களூரு வந்துள்ளார்.
பின்னர், மங்களூரு வந்த சுரேஷை ஜீனத், தனது காரில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தர்ம அடி காத்திருப்பது தெரியாது அங்கு சென்ற சுரேஷை ஜீனத் கணவர் உள்பட நால்வர் சேர்ந்து அடித்து, ஆடைகளற்ற புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த புகைப்படத்தை வைத்து மிரட்டி சுரேஷிடம் அந்த கும்பல் ஐந்து லட்சம் ரூபாயை கேட்டுள்ளது. இதற்கு தற்போது தன்னால் முப்பதாயிரம் ரூபாய்தான் தர முடியும் எனவும், பின்னர் மொத்த ரூபாயையும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் கூறி அந்த இடத்திலிருந்து தப்பித்து வந்து புகார் அளித்துள்ளார்.
காதல் வலையில் சிக்க வைத்தவர்கள் இப்போது காவல் சிறையில்...!
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சுர்தகால் காவல் துறையினர் கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரட்கலின் ரேஷ்மா என்ற நீமா, ஜீனத் என்ற ஜீனத் முபீன், அவரது கணவர் இக்பால் முகமது என்ற இக்பால், நசிப் என்ற அப்துல் காதர் நஜீப் ஆகிய நால்வரை கைது செய்துள்ளதாக காவல் ஆணையர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
பங்கமாக மாட்டிக்கொண்ட தொடர் மோசடி கும்பல்
மேலும் விசாரணை நடத்திய காவல் துறையினர் இந்த கும்பல் இது போன்று பேஸ்புக்கில் காதல் வார்த்தைகள் பேசி தங்கள் வீட்டிற்கு அழைத்து தர்ம அடி கொடுத்து அவர்களின் ஆடைகளற்ற புகைப்படங்களை எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்ததுள்ளது.
தற்போது ஆறு இளைஞர்களிடம் இது போன்று பணம் பறித்துள்ளது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க...மத்தியப் பிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 17 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு!