ETV Bharat / crime

ஆவடியில் பெரியம்மா வீட்டில் நகைகளை அபேஸ் செய்த மகள்கள்! - crime in lockdown

ஆவடி அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்த, அவர் மனைவியின் தங்கை மகள்களை காவலர்கள் வலைவீசித் தேடி வருகின்றனர்.

வருவாய் ஆய்வாளர் வீட்டில் கொள்ளை, avadi, government officer jewellery and money theft in avadi, jewellery and money theft in avadi, வீட்டில் நகைகளை திருடிய மகள்கள், ஆவடியில் உறவினர் வீட்டில் கொள்ளை, avadi crime, chennai crime, crime in lockdown, lockdown crimes
ஆவடியில் பெரியம்மா வீட்டில் நகைகளை அபேஸ் செய்த மகள்கள்
author img

By

Published : Jun 8, 2021, 9:45 AM IST

சென்னை: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், பஞ்சாட்சரம் (56). இவர் வேலூரில் தங்கியிருந்து வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (51) திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் செவிலியருக்கான ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தை கிடையாது.

உதவிக்கு வந்த தங்கை மகள்கள்

கடந்த மாதம் தனலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர், வேலூரில் உள்ள தனது சகோதரியின் மகள்களான உமா மகேஸ்வரி, பூர்ணிமா ஆகியோரை வீட்டிற்கு உதவிக்காக அழைத்திருந்தார். அவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வீட்டில் தனலட்சுமிக்கு துணையாக தங்கியிருந்துள்ளனர்.

சிறுகச் சிறுக திருடிய மகள்கள்

இந்நிலையில் நேற்று (ஜுன் 7) தனலட்சுமி வீட்டு அலமாரியில் இருந்த நகைகளை சரிபார்த்து உள்ளார். அப்போது அங்கு இருந்த 30 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. மேலும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரமும் திருடப்பட்டது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, அவர் தனது செல்போனில் இருந்த "கூகுள் பே" - செயலியை சரி பார்த்து உள்ளார். அப்போது அதிலிருந்து ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என அவ்வப்போது பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிப்படை தேடுதல்

மேலும், அந்தப் பணம் தங்கை மகளான உமா மகேஸ்வரியின் கணவர் ஆனந்தன் வங்கிக் கணக்கில் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நகைகளையும், பணத்தையும் உமாமகேஸ்வரி, பூர்ணிமா ஆகியோர் சேர்ந்துதான் திருடி இருப்பது தனலட்சுமிக்கு உறுதியாகியுள்ளது. இது குறித்து தனலட்சுமி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள உமா மகேஸ்வரி, பூர்ணிமா ஆகிய இருவரையும் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.