ETV Bharat / crime

சிட் ஃபண்ட் நடத்தி ஊரையே ஏமாற்றிய குடும்பம் தலைமறைவு - family who cheated chit fund in Chennai

சிட் ஃபண்ட் மூலம் ரூ. 4 கோடியே 5 லட்சம் வரை மோசடி செய்து, ஒரு ஊரையே ஏமாற்றிய குடும்பம் தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகாரளிக்க வந்த மக்கள்
புகாரளிக்க வந்த மக்கள்
author img

By

Published : Jan 8, 2022, 6:48 AM IST

சென்னை: செங்குன்றம், ஆட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் கும்பலாக வேனில் வந்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் மனுவில், “செங்குன்றம் அருகே ஆட்டம் தாங்கல், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் செல்வி (45). இவரது கணவர் ராமசந்திரன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கணக்களராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் குடியிருந்து மகன் பெயரில் சிட் ஃபண்ட், ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரது தொழிலுக்கு குடும்பத்தினரும் உதவியாக இருந்து வருகின்றனர்.

ஊரையே ஏமாற்றிய குடும்பம் தப்பியோட்டம்

இந்நிலையில் பஞ்சவர்ணம் செல்வி, சிட் ஃபண்ட் மற்றும் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தியவர்களுக்கு பல ஆண்டாக பணம், ஒழுங்காக கொடுத்து வந்துள்ளார். பின்னர் அப்பகுதியில் பலரிடம் பழகி, தனது மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது எனக் கூறியும், கணவர் மருத்துவ செலவு உள்ளது என அக்கம்பக்கதினரிடம் ரூ. 5 லட்சம்,10 லட்சம் எனப் பல லட்சம் வரை பணத்தை பெற்று உள்ளார்.

தங்களை நம்ப வேண்டும் என்பதற்காக பாண்ட் பத்திரங்கள், காலி காசோலைகளை வழங்கியுள்ளார். இதில் நம்பி பலரும் பல லட்ச ரூபாய் பணத்தினை வழங்கி உள்ளனர். குறிப்பாக ஒரு குடும்பத்தில் பணம் கேட்டு பெற்றதை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு கடன் கொடுத்தவர்களுக்கு அவர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பணத்தை இழந்த நபர்கள் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது அவர் பணத்தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 4 கோடியே 5 லட்சம் வரை பண மோசடி செய்து உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புகாரளிக்க வந்த மக்கள்

இதனையடுத்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், அந்த புகாரை சோழவரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் காவல் ஆணையர் அலுவலகத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Chengalpattu Encounter: செங்கல்பட்டு இரட்டை கொலை: 2 ரவுடிகள் என்கவுன்ட்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.