தர்மபுரியை சேர்ந்தவர் தர்மராஜ் (19). இவர் டிப்ளோமா முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக பூமாலை கட்டும் தொழில் செய்து வருகிறார். அப்பகுதியில் குடியிருந்து வரும் 16 வயது அரசு பள்ளி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், மாணவியை உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனா்.
ஆனால், உறவினர் வீட்டிற்கும் சென்ற தர்மராஜ், அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தர்மராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த மகளிர் காவல்துறையினர், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!