ETV Bharat / crime

மாங்கொட்டையில் வெடிகுண்டு - உயிருக்கு போராடும் பசுமாடு! - மாங்கொட்டையில் வெடிகுண்டு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாடு படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cow injured by country bomb in thirupathur

author img

By

Published : Jun 18, 2021, 8:14 AM IST

ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான பசுமாடு ஒன்றை வனப்பகுதியை ஒட்டி மேய்ச்சலுக்கு விட்டிருந்த நிலையில், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்துள்ளது.

இதில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில், பசுமாட்டின் வாய் பகுதி சிதறி படுகாயமடைந்து. இது குறித்து உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, படுகாயமடைந்த பசுவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, உமராபாத் காவல் துறையினரும், வனத் துறையினரும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.