ETV Bharat / crime

சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு - ஒன்பது காவலர்கள் மீது வழக்குபதிவு

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்பது காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

attack on a law college student in Chennai
சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்
author img

By

Published : Jan 21, 2022, 6:24 PM IST

சென்னை: வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் ஜன.13ஆம் தேதி பணியை முடித்து கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் வழியாக வந்த போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றதாக வழக்குபதிவு செய்து அபராதம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.

அப்போது ரஹீம், முகக்கவசம் அணிந்திருப்பதாக கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவலர் உத்திரகுமாரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. உடனே காவல்துறையினர் ரஹீமை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வீடியோ

இதனையடுத்து கொடுங்கையூர் காவல்துறையினர் இரவு முழுவதும் தன்னை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதாக ரஹீம் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இரவு முழுவதும் பைப் மற்றும் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தியதாகவும், சாதி ரீதியாக அசிங்கபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தன்னை தாக்கிய எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா, கொடுங்கையூர் காவல் நிலைய காவலரான உத்திரகுமார், ஹேம நாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி,தலைமை காவலர் பூமி நாதன் உட்பட ஒன்பது காவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை காவலர் பூமி நாதன் மற்றும் முதல் நிலை காவலர் உத்திரகுமார் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் நசீமா உட்பட கொடுங்கையூர் காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவர்

இந்த நிலையில் தன்னை தாக்கியதாக அப்துல் ரஹீம் புகாரளித்த ஒன்பது காவலர்கள் மீது கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது ஆபாசமாக திட்டுதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பினரிடமும் ஆர்.டி.ஓ கண்ணப்பன் விசாரணை நடத்தவுள்ளார்.

இதையும் படிங்க: தனியாக வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்- இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.