கொல்லம் (கேரளம்): சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தில் கேரளத்தில் பிரதான சாலையொன்றில் கஞ்சா செடிகள் காணப்பட்டன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் பிரதான பகுதியான கந்தசிரா சாலையில் கஞ்சா நடவு செய்திருப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தப் தகவலின் அடிப்படையில் காவலர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று அங்கு நடவு செய்யப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அகற்றினார்கள்.
இந்தச் சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சாலையில் கஞ்சா நடவு செய்த சமூக விரோத கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை