மயிலாடுதுறை: குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (60). பாஜக நிர்வாகி.
இவர் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உள்பட 6 சிறுமிகளிடம் தனது அலைபேசியில் உள்ள ஆபாச படங்களைக் காண்பித்து, அதுபோல தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து, ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மகாலிங்கத்தைக் கைது செய்தனர். அவர் மீது, கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் இச்சையை தூண்டுதல், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு போக்சோ