ETV Bharat / crime

ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சிகள் - Crime news

மதுரையில், பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம். இயந்திரத்தை சேதப்படுத்தி பணம் திருட முயன்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
author img

By

Published : Sep 10, 2021, 10:15 PM IST

மதுரை: பெத்தானியாபுரம் அண்ணா வீதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அதே ஏடிஎம்மில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், உள்ளே நுழைந்ததும் பாட்டில் மூலமாக சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே செய்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து எஸ்பிஐ வங்கி மேலாளர் அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், வங்கி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சோதனை செய்ததில் ஏடிஎம் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

இதுகுறித்து, உடனடியாக மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரையும் காவலர்கள் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.