ETV Bharat / crime

ஆட்டோவில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது - பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுனர்

சென்னையில் ஊபர் ஆட்டோவில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் ஊடகவியல் மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை... அலட்சியம் காட்டிய காவல்துறை

author img

By

Published : Sep 27, 2022, 3:58 PM IST

சென்னை: தரமணியில் உள்ள பத்திரிக்கையாளர் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் சென்னை காவல்துறையை டேக் செய்து புகார் ஒன்றை அளித்தார். அதில் ஈசிஆரில் இருந்து செப்.25ஆம் தேதி சோழிங்கநல்லூரில் உள்ள தான் தங்கியிருக்கும் விடுதிக்கு உபர் ஆட்டோ மூலம் வந்ததாகவும், விடுதி வந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சம்பந்தப்பட்ட ஆட்டோ மற்றும் ஓட்டுநரின் புகைப்படத்தையும் பதிவிட்டுருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதற்கு பதில் அளித்த சென்னை காவல்துறை, சம்பவம் தாம்பரம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால் தாம்பரம் காவல்துறைக்கு தெரிவிக்கவும் என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உபர் நிறுவனமும் சமூக வலைதளம் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்த விவகாரம் தொடர்பான தகவல்களையும் கேட்டுள்ளது. செம்மஞ்சேரி தனிப்படை போலீசார் சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் காதலியை இரும்புக் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த காதலன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.