ரேணிகுண்டா: சிட்டூர் மாவட்டம் ரேணிகுண்டாவில் நேற்று (ஜனவரி 20) இக்கொடூரச் சம்பவம் நடந்தேறியது. காவல் துறையின் தகவல்படி, ரவிச்சந்திரன் (53) - வசுந்தரா தம்பதியினர் ரேணிகுண்டாவில் வசித்துவந்தனர். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில், இந்தத் தம்பதிக்கு இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், கோபத்தின் மிகுதியில் வசுந்தரா தனது கணவனைக் கொடூரமாகக் கொலைசெய்து அவரின் தலையை வெட்டிப் பையில் போட்டுக் கொண்டு காவல் துறையில் சரணடைந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியான காவல் துறையினர், இறந்த கணவரின் உடலை திருப்பதி மருத்துவக் கல்லூரியில் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:நிலத்தகராறு: தந்தை மகனை தாக்கியவர்கள் மீது வழக்கு