ETV Bharat / crime

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு - வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிய பெண் - ஓய்வு பெற்ற ஆசிரியை

ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் திருடப்பட்ட நகையுடன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண்; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து குற்றவாளியை கைது செய்த போலீசார்...

author img

By

Published : Oct 9, 2022, 8:59 PM IST

தென்காசி: 2019ஆம் ஆண்டு தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை பங்கஜவல்லி வசித்து வருகிறார். இவரது வீட்டில் ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பங்கஜவல்லி வீட்டில் இருந்த சுமார் 16 சவரன் தங்க நகைகள் திருடு போனது, இது தொடர்பாக 2019ஆம் ஆண்டு தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் எந்த துப்பும் இல்லாம் இருந்து வந்தது. இவ்வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படும் பெண் ஒருவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து புகார் அளித்தவரும், காவல் துறையினரும் சந்தேகம் அடைந்துள்ளனர்.

அதனடிப்படையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தென்காசி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திருடு போன நகைகளை வீட்டில் பணி செய்த பணியாளர் ஈஸ்வரி திருடிவிட்டு நாடகம் மாடியது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டு ஈஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: செங்கல்பட்டில் பட்டப்பகலில் செயின் பறிப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.