துபாயிலிருந்து நேற்று இரவு முதல் இன்று காலை வரை, எமரேட்ஸ், ஃபிளை துபாய், இண்டிகோ ஏா்லைன்ஸ் ஆகிய 3 சிறப்பு விமானங்கள் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தன. வழக்கம்போல் பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 18 பயணிகள் அணிந்திருந்த மாஸ்க்குகள், உள்ளாடைகள், பேண்ட் பெல்ட்டுகள், சட்டை பாக்கெட்கள், ஆசனவாய் என பல்வேறு பகுதிகளிலும் தங்க பேஸ்ட்கள், கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 18 பயணிகளிடமிருந்தும் மொத்தம் 8.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.4.5 கோடியாகும். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், 18 பேரும் தனித்தனி விமானங்களில் வந்த ஒரே கடத்தல் கும்பலை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. மேலும் இவா்கள் சா்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்ற திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: கார்கோ ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை: சிறுவன் உட்பட மூன்று பேர் கைது