ETV Bharat / crime

Sim Swap Scam: சிம் கார்டை மாற்றி கொள்ளை; வட மாநில கும்பலை பிடித்த குற்றப்பிரிவு - முழு விவரம்

Sim Swap Scam: தனியார் கண் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இ-மெயிலை ஹேக் செய்ததன்மூலம் வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டை மாற்றி ரூ. 25 லட்சத்தை நூதனமாக திருடிய நான்கு வட மாநிலத்தவர்களை சென்னை மத்திய குற்றப்பிரவு சைபர் கிரைம் காவலர்கள் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள அந்தக் கும்பலின் தலைவனை பிடிக்க அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 North Indian held in Sim Swap Scam, 25 Lakhs theft from Eye Hospital leads to Sim Swap Scam, Chennai Central Crime Cyber Crime Police.
கைதுசெய்யப்பட்ட நான்கு வட மாநிலத்தவர்கள்
author img

By

Published : Jan 4, 2022, 2:03 PM IST

Sim Swap Scam: சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உதி என்ற பெயரில் பிரபல கண் மருத்துவமனை இயங்கிவருகிறது.

கடந்த நவம்பர் மாதம், அந்த மருத்துவமனையின் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதிலிருந்த 25 லட்ச ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக, மருத்துவமனை நிர்வாகம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2011ஆம் ஆண்டு, மருத்துவமனை நிர்வாகம் வங்கி பரிவர்த்தனைக்காக 5 சிம்கார்டுகளை வாங்கி இருப்பதும், அந்த சிம்கார்டுகள் தொலைந்துவிட்டால் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள 5 டம்மி சிம்கார்டுகளும் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மருத்துவமனை புகார்

குறிப்பாக, ஒரிஜினல் சிம்கார்டுகள் காணாமல் போகும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மருத்துவமனை அதிகாரப்பூர்வ இமெயிலை பயன்படுத்தி, அதன் மூலம் மின்னஞ்சல் அனுப்பி டம்மி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து கொள்ளும் வகையில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவ்வாறு பயன்படுத்தி வந்த ஒரு செல்போன் எண்ணை மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பளம் போடும் வங்கிக் கணக்கோடு இணைத்து வைத்திருந்துள்ளனர். அந்த வங்கி கணக்கில் இருந்துதான் சுமார் 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மருத்துவமனை அளித்திருந்தது.

16 கணக்குகளுக்கு பணம் மாறியது

இந்த வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. முதற்கட்டமாக, மருத்துவமனையின் வங்கிக்கணக்கில் இருந்து சென்ற பணம், மேற்கு வங்களாத்தில் 16க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் சென்றடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, முதலில் இரண்டு வங்கிக் கணக்குகளில் பிரித்து போடப்பட்டு பின்பு, அதிலிருந்து 8 வங்கி கணக்குகள், அதிலிருந்து 16 வங்கிக் கணக்குகளில் பணம் மாற்றப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த வங்கிக் கணக்கில் தொடர்புடைய முகவரிகளை பட்டியல் எடுத்து தனிப்படை காவலர்கள் மேற்கு வங்கம், பெஹனா பகுதிக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது, பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்குகளின் முகவரியை வைத்து, பணம் மாற்றப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் போலி முகவரிகள், போலி ஆதார் கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இதனால், குற்றவாளிகளை பிடிப்பதில் சவாலாக இருந்தது.

நால்வர் கைது

இருப்பினும், வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும்போது சம்பந்தப்பட்ட ஏடிஎம்-இல் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவான புகைப்படங்களை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை காவலர்கள் தேடினர்.

சிசிடிவி புகைப்படங்களை அடிப்படையாக வைத்து காவலர்கள் தெருதெருவாக நடந்து சென்று பொதுமக்களிடம் புகைப்படங்களை காண்பித்து குற்றவாளர்களிகளை தேடினர்.

அப்போது, சைபர் கொள்ளையரான ராகேஷ் குமார் சிங்கை காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், இவரை வைத்து மற்றொரு குற்றவாளியான ரோகோன் என்பவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்ததில் மேலும் இருவரை பங்களாதேஷ் நாட்டு எல்லைப் பகுதியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த நான்கு பேருக்கும் தலைவனாக செயல்பட்ட சதீஷ் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் பின் சிம் ஸ்வாப் (Sim Swap) எனப்படும் முறையை பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடிப்பது தெரியவந்துள்ளது.

இ-மெயில் ஹக்கிங்

சிம்கார்டு உடைந்தலோ, பழைய சிம் காடாக மாறினாலோ அல்லது நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டாலோ, அருகிலுள்ள சம்மந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்தில் டம்மி சிம் கார்டு மூலம் பழைய செல்போன் எண்ணை மக்கள் திரும்ப பெறுவர்.

4 North Indian held in Sim Swap Scam, 25 Lakhs theft from Eye Hospital leads to Sim Swap Scam, Chennai Central Crime Cyber Crime Police.
கைதுசெய்யப்பட்ட நான்கு வட மாநிலத்தவர்கள்

இதில், நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளை வாங்கும் நிறுவனங்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் போன்ற முக்கியமான நபர்களுக்கு சிம்கார்டு உடைந்தாலோ அல்லது பழையதானாலோ டம்மி சிம் கார்டு அருகிலுள்ள ஷோரூமில் பெற்றுக் கொண்டு, அதை அதிகாரப்பூர்வ இ-மெயில் மூலமாக சம்மந்தப்பட்ட சிம் கார்டு நெட்வொர்க் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இது குறிப்பிட்ட சில முக்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நெட்வொர்க் நிறுவனங்கள் இந்த இ-சிம் ஆக்டிவேசன் வசதியை வழங்கும்.

இதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த மோசடி கும்பல், வங்கியில் இருந்தோ, தொடர்புடைய நெட்வொர்க் நிறுவனத்திலிருந்தோ தகவல்களைப் பெற்று மோசடி செய்வதை சைபர் கிரைம் காவலர்கள் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். அந்த அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின், அதிகாரப்பூர்வ இ-மெயிலை ஹேக் செய்து தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல்முறை

அதன் பிறகு மருத்துவமனை தனது வங்கிக் கணக்கை இணைத்திருக்கும் சிம் கார்டு தொலைந்து விட்டதாக கூறி, டம்மி சிம் கார்டு ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர். பின்னர், அதனை ஆக்டிவேட் செய்வதற்கு ஹேக் செய்த இ-மெயில் மூலமாக மருத்துவமனை நிர்வாகம் மெயில் அனுப்புவது போல் மோசடி செய்து, இ-சிம் ஆக்டிவேஷன் முறையில் சிம் கார்டை ஆக்டிவேட் செய்துள்ளனர்.

குறிப்பாக, வங்கி விடுமுறை நாள்களான வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் இந்த மோசடியில் ஈடுபடுவதால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு எந்தவித குறுஞ்செய்தியும் வராது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு இந்த கும்பல் பெரும் மோசடியை அரங்கேற்றியுள்ளது.

அவ்வாறாக, மருத்துவமனை வங்கி கணக்கு தொடர்புடைய சிம் கார்டு ஆக்டிவேட் செய்து அதன்மூலம், மருத்துவமனை வங்கிக் கணக்கில் உள்ள ரூ. 25 லட்சம் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். சிம் ஸ்வாப் என்றழைக்கப்படும் இந்த முறையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக மோசடி நடந்திருப்பதை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்

மேலும், காவலர்கள் கைது செய்த இந்த கும்பலிடமிருந்து 103 போலி ஆதார் அட்டைகள், வங்கி ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களிடம், நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடியை வெளிக் கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவில் இந்த நூதன முறையில் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க வரலாம் என காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்காளத்தில் இருந்து கைதுசெய்யப்பட்ட ரோகோன், ராகேஷ்குமார் சிங், சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகிய நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிம் ஸ்வாப் எனும் நூதன முறையில் எத்தனை பேரை மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதார் கார்டுகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோவை அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி; இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.