ETV Bharat / crime

10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு - 10 year old kid suicide

ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு
10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு
author img

By

Published : Aug 26, 2021, 7:59 AM IST

சென்னை: பத்து வயதுடைய பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருவொற்றியூர் என்.டி.ஓ. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார். இவருடைய மனைவி பூஜா. இவர்களது மகன் ரித்திக் (10), புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்துவந்தார்.

இந்நிலையில் இன்று பூஜா பொருள்கள் வாங்க சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரித்திக் புடவையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாகச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

10 year old kid suicide in chennai thiruvotriyur
தற்கொலை செய்துகொண்ட சிறுவன்

மேலும் சிறுவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருவொற்றியூர் பகுதியில் 10 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.