திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில், விவசாயி ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ஆட்டு கொட்டகைக்குள் ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன் தினம் (பிப். 04) இரவு கொட்டகைக்குள் நுழைந்த வன விலங்கு ஒன்று, இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றதுடன், சில ஆடுகளை காயப்படுத்திச் சென்றது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடம் சென்ற வனத்துறையினர், இரவு முழுவதும் அந்த கிராமத்தில் முகாமிட்டு வன விலங்கை பிடிப்பதாக உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்க: நாட்டு வெடி குண்டுகளைக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது