வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஜெகதீசன் என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்து அரசு மருத்துவரிடம் கையெழுத்து பெற சென்றபோது, அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் மாரிமுத்து என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால் தான் உங்களுக்கு கையெழுத்து பெறமுடியும் என்று கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நோயாளி தரப்பினரை கழுத்தை பிடித்து மாரிமுத்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற காட்சி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.