வேலூர் சேண்பாக்கம்-பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் சங்கர். கிருஷ்ணகிரியில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மாமனாரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றுமுன் தினம் (ஜூன்11) குடும்பத்துடன் வள்ளிமலை அருகே மேல்பாடி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர், நேற்று (ஜூன்12) காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்ததில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.70,000 ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற வேலூர் வடக்கு காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் குழு உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து ரூ.47.25 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது