திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி புதியதாக சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
நேற்று இரவு கோயிலின் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்து கோயிலின் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைத்திருந்த உண்டியலை தூக்கிச்சென்றனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பூஜை செய்ய வந்த பக்தர்கள் கோயிலின் வெளிபக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகி உமராபாத் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோயிலை ஆய்வு செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறுகையில், கும்பாபிஷேகம் முடிந்து இதுவரையிலும் காணிக்கையை எண்ணவில்லை.கொள்ளைப்போன உண்டியலில் ஏறத்தாழ 50,000 ரூபாய்க்கும் மேல் பணம் இருந்திருக்ககூடும்” என்றனர்.
இதையும் படிங்க : பட்ஜெட் 2020-21: சென்னை மெட்ரோவுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு