வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த எல்லப்பன்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகை அருகை உள்ள வயல்பரப்பில் கோழியை விழுங்கியபடி 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், பாம்புடன் போராடி இறந்த நிலையில் இருந்த கோழியை வெளியே எடுக்க முயற்சி எடுத்தபடி, அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், அப்பகுதியினர் அளித்தத் தகவலின் பேரில், அங்கு சென்ற ஒடுக்கத்தூர் வனத்துறையினரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
மேலும் ஒடுக்கத்தூர் வனசரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் மலைப்பாம்புகள் வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: