வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் வேல்லண்டப்பன் கோயில் மலையடிவாரத்தில் 144 தடையை மீறி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கள்ளச்சாராயம் வாங்க ஆற்காடு, வேலூர், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தினமும் ஊருக்குள் வந்துள்ளனர்.
இதன் காரணமாக கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி கள்ளாச்சாராய விற்பனையாளர்களை தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கள்ளச்சாராய விற்பனையாளர்கள் பொது மக்கள் மீது நடத்திய நாட்டு துப்பாக்கி சூட்டில் பூபாலன், சங்கர், அண்ணாமலை ஆகியோர் குண்டடிபட்டு படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பியோடிய சாராய விற்பனையாளர்களை பிடிக்க பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று பலாமரத்து கொள்ளை மலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (28), நடராஜன் (20), மற்றும் 17 வயது சிறுவன் என 3 பேரை பிடித்த தனிப்படை காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.