ETV Bharat / city

ஆக்ஸிஜன் பிரச்னை 2 நாட்களில் தீர்க்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் - அமைச்சர் துரைமுருகன்

வேலூரை பொறுத்தரை 100 நோயாளிக்கு ஆக்ஸிஜன் அனுப்பினால் அது வருவதற்குள் 150 நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது.

ஆக்ஸிஜன் பிரச்னை 2 நாட்களில் தீர்க்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்

author img

By

Published : May 14, 2021, 5:26 PM IST

வேலூர்: ஆக்ஸிஜன் பற்றாக்குறை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும். மத்திய அரசிடம் ஆக்ஸிஜன் கேட்டுள்ளோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வேலூருக்கு வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு, வேலூர் அண்ணா சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அரசு அலுவலர்கள் வரவேற்ப்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில், வேலூர் மாவட்டத்தின் கரோனா நிலவரம் குறித்து டிஆர்ஓவிடம் பேசி வருகிறேன். நேற்று கூட ஆக்ஸிஜன் தேவை என கேட்டார்கள், அதை அனுப்பிவைத்தோம். அது இரவுக்குள் காலியாகிவிட்டதாக கூறி மீண்டும் கேட்டார்கள், 2ஆவது முறையும் ஆக்ஸிஜன் அனுப்பியுள்ளோம். இது போதிய அளவுக்கு உள்ளதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

வேலூரை பொறுத்தரை 100 நோயாளிக்கு ஆக்ஸிஜன் அனுப்பினால் அது வருவதற்குள் 150 நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது. இந்த பிரச்னை 2 நாட்களில் தீர்க்கப்படும். மத்திய அரசிடமும் ஆக்ஸிஜன் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.