ETV Bharat / city

'காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது விரைவில் சரிசெய்யப்படும்' - கதிர் ஆனந்த் - காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது

வேலூர்: பழுதடைந்த காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்த வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் விரைவில் மேம்பாலம் சரிசெய்யும் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கதிர் ஆனந்த்
author img

By

Published : Sep 19, 2019, 11:02 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி-சித்தூர் சாலையில் உள்ள முக்கிய போக்குவரத்து மேம்பாலம் பழுதாகி இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து இன்று காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சென்னை கோட்ட மேலாளர் மகேஷுடன், சென்னை ரயில்வே கோட்டத்தின் ஆலோசனைக் குழு தலைவரும் வேலூர் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த் ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’1989ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி மேம்பாலம் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இது பல காரணங்களால் பழுதாகி உள்ளது. இதை புதிய தொழில் நுட்பமான கார்பன் பைபர் தொழில் நுட்பம் மூலம் பலப்படுத்தி சீரமைக்க உள்ளோம். இந்த பணி மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

இதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கும். மேம்பால பணிகள் நடைபெறும்போது கனரக வாகனங்கள் இவ்வழியாக அனுமதிக்கப்படாது. அதேபோல் காட்பாடி ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வடுகந்தாங்கல் விரிஞ்சிபுரம் இடையே இருக்கும் ரயில்பாதையின் குறுக்கே உள்ள சேதமடைந்த சாலையும் சரி செய்யப்படும். அதேபோல் காட்பாடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. காட்பாடி ரயில் நிலையத்தில் நவீன முறையில் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

கதிர் ஆனந்த் பேட்டி

Intro:வேலூர் மாவட்டம்

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் காட்பாடி ரயில்வே மேம்பாலம் விரைவில் சீரமைக்கப்படும்- காட்பாடி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு வேலூர் எம்.பியும் சென்னை ரயில்வே கோட்ட ஆலோசனைக்கு தலைவருமான கதிர் ஆனந்த் பேட்டி
Body:வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி-சித்தூர் சாலையில் உள்ள முக்கிய போக்குவரத்து மேம்பாலம் பழுதாகி இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து இன்று காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சென்னை கோட்ட மேலாளர் மகேஷ், சென்னை ரயில்வே கோட்டத்தின் ஆலோசனைக் குழு தலைவரும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
சென்னை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு தலைவரும் எம்.பி கதிர் ஆனந்த் கூறும் போது.

1989-ல் இருந்து காட்பாடி மேம்பாலம் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இது தற்போது பல காரணங்களால் பழுதாகி உள்ளது. இதை தற்போது புதிய தொழில் நுட்பமான கார்பன் பைபர் தொழில் நுட்பம் மூலம் பலப்படுத்து சீரமைக்க உள்ளோம். மேம்பாலம் 3 அல்லது 4 மாதச்களுக்குள் சீரமைக்கப்படும் பணிகள் முடிக்கப்படும். இதரற்க்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது விரைவில் பணிகள் துவங்கும். மேம்பால பணிகள் நடைபெறும் போது கனரக வாகனங்கள் இவ்வழியாக அனுமதிக்கப்படாது. அதேபோல் காட்பாடி ரயில் நிலையத்தை மேலும் மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் வடுங்கன்தாங்கல் விரிஞ்சிபுரம் இடையே ரயில்பாதையின் குறுக்கே உள்ள சாலையும் சரி செய்யப்படும். அதேபோல்
காட்பாடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதரற்க்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
காட்பாடி ரயில் நிலையத்தில் நவீன மூறையில் பார்க்கிங் வசதி செய்யப்படும் என
சென்னை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு தலைவர் எம்.பி கதிர் ஆனந்த் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.