வேலூர் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் கோட்டத்தலைவர் ராமன், பொதுச்செயலாளர் குணாளன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அதில் பேசிய ராமன், “மத்திய அரசு இந்தாண்டு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கை மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையாக உள்ளது. குறிப்பாக காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும், எல்ஐசியின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை காப்பீட்டுதாரர்களின் நலனைப் பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். எனவே தனியார்மயம் என்பதை அரசு கைவிட வேண்டும் அனைத்துப் பெரு நிறுவனங்களும் அந்நிய நிறுவனங்களின் கைக்கு சென்றுவிடும்.
ஆதலால், இதனை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் முதற்கட்டமாக பிப்ரவரி 8ஆம் தேதி காப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பொதுமக்களும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க...திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...