ETV Bharat / city

ஆற்றுப்படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - வேலூர் ஆட்சியர் - vellore kudimaramathu works

வேலூர்: ஏரிகள், ஆறுகள், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

மக்கள் குறைதீர் கூட்டம்
author img

By

Published : Aug 24, 2019, 7:45 PM IST

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. விரைவில் குடிநீர் பற்றாக்குறை நூறு விழுக்காடு தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் குடிமாரமத்துப் பணிகளுக்காக பொறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் வகையில் அதற்கான சர்வே பணிகள் நடைபெற்றுவருகிறது. அது நிறைவடைந்தபிறகு ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

இதையடுத்து அமைச்சர் வீரமணி பேசுகையில். "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் திறமையான ஆட்சி செய்துவருகிறார். அதற்கு உதாரணமாக வேலூரை இரண்டு மாவட்டமாக பிரித்தால் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகைக்கு ஈட்டு செல்லும் என்பதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாகப் அறிவித்தார். மேலும் ஜோலார்பேட்டை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்தார்.

இதில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தாசில்தார் ஆனந்த்கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி. ரமேஷ், வருவாய் துறை அலுவலரகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Intro:வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், கால்வாய் ஆக்ரமிப்பில் உள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி...

Body:
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்.

வேலூர் மாவட்டத்தில் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவின்பேரில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் ஜோலார்பேட்டை தொகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்வு காணும் வகையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் குடிநீர்வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. விரைவில் 100 சதவீதம் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும், வேலூர் மாவட்டத்தில் குடி பராமரித்து பணியின் மூலம் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரிகள் மற்றும் ஓடை பொறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் வகையில் அதற்கான சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரி புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து உள்ள நிலங்களில் விலை பெயர்கள் அறுவடை செய்த பிறகு ஆக்கிரமிப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்..
அமைச்சர் வீரமணி பேசுகையில்...
தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழியில் திறமையான ஆட்சி செய்து கொண்டுவருகிறார். வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருத்தில்கொண்டு நீர் மேலாண்மை கருத்தில்கொண்டு மாவட்டத்திலுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான ஏரிகளை தூர்வாரும் பணி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டம் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதற்கு முன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் மாவட்டம் உருவாக்குவதற்கான கோரிக்கை வைத்தபோது அவர் அப்போது நாட்டறம்பள்ளி புதிய தாலுகாவாக உருவாக்கி அதற்கு வழி வழியை ஏற்படுத்தித் தந்தார். மாவட்டம் விரிவாக்கும் வகையில் அணைக்கட்டு , பேரணாம்பட்டு, நெமிலி, புதிய தாலுக்காவை உருவாக்கி புதிய மாவட்டம் உருவாக்குவதற்கு சிறப்பான ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். அம்மா வழியில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடத்தில் எடுத்துக் கூறிய பொழுது கனிவாக எடுத்துக்கொண்டு வேலூரை இரண்டு மாவட்டமாக பிரித்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகை செய்யும் அதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரித்து மக்கள் வளர்ச்சிக்கு உள்ளார்.. ஜோலார்பேட்டை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.. இதில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தாசில்தார் ஆனந்த்கிருஷ்ணன் , முன்னாள் எம்எல்ஏ கே.ஜி. ரமேஷ், முன்னாள் சேர்மன் ரமேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.