ETV Bharat / city

ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனங்களுக்கு செக்!

author img

By

Published : Apr 5, 2021, 6:35 PM IST

அனுமதியில்லாமல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப செல்லும் வாகனங்களை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Election Monitoring Committee confiscated atm money refilling vehicles in velloreElection Monitoring Committee confiscated atm money refilling vehicles in vellore
Election Monitoring Committee confiscated atm money refilling vehicles in vellore

வேலூர்: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பண கொடுப்பதைத் தடுக்கும் வண்ணம் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வங்கி, ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்வதற்கு முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஏப்.5) வேலூரில் பறக்கும் படையும், நிலை கண்காணிப்பு குழுவும் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டது.

இச்சூழலில் வேலூர் அண்ணா சாலை டோல்கேட் பகுதி அருகே லட்சுமி திரையரங்கம் முன்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே எடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக வந்த இரண்டு தனியார் பணம் நிரப்பும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் முறையாக அனுமதி பெறாமல் 1 கோடியே 46 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதே போன்று சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தபோது பொது துறை வங்கியான எஸ்பிஐ தலைமை அலுவலகத்திலிருந்து கிளைக்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தை மறித்து விசாரணை செய்தனர். அப்போது அதில் 1 கோடியே 56 லட்ச ரூபாய் பணம் இருந்தது.

மேலும், வேலூர் வடக்கு காவல் நிலையம் அருகே மற்றொரு நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டபோது, அவ்வழியே பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏடிஎம் மையங்களுக்கு கொண்டு சென்ற ரூ.65 லட்சம் என அனைத்து வாகனமும் வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு காவல் துறையினரும், வங்கியின் பாதுகாப்பு குழுவினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று வேலூர் கோட்டாட்சியர் கணேஷ் ஆய்வு செய்துவிட்டு ஒவ்வொறு வாகனங்களாக விடுவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.