ETV Bharat / city

வாக்களிப்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஓவியம் வரைந்து அசத்தல்!

வேலூர்: 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூரில் பள்ளி மாணவர்கள் மெகா ஓவியம் வரைந்தனர்.

art
author img

By

Published : Mar 28, 2019, 10:40 PM IST

வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

வாக்களிப்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஓவியம் வரைந்து அசத்தல்!

அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மெகா ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை ஓரம் சுமார் 100 அடி தூரத்திற்கு பதாகைகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் தங்கள் கைவண்ணங்களில் ஓவியம் வரைந்தனர்.

அந்த ஓவியங்களில் இந்திய வரைபடத்தை வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தையும் உணர்த்தி, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடும் வகையில் பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தினார்கள். இதை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று பாராட்டினார்.

Intro:100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி

வேலூரில் பள்ளி மாணவர்கள் மெகா ஓவியம் வரைந்து அசத்தல்

Body:வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதன்படி சிலம்பாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மெகா ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை ஓரம் சுமார் 100 அடி தூரத்திற்கு பதாகைகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் தங்கள் கைவண்ணங்களில் ஓவியம் வரைந்தனர் அந்த ஓவியங்களில் இந்திய வரைபடத்தை வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தையும் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடும் வகையில் பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தினார்கள். இதை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று பாராட்டினார்.

Conclusion:அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஷ் உடனிருந்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.