ETV Bharat / city

கரோனா தீவிரம்: கைதிகளுக்கு பண்டிகை கால பரோல் அனுமதி மறுப்பு! - Denial of festive parole to inmates at Vellore Jail due to intensification of corona spread

கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்குப் பண்டிகை கால பரோல் அனுமதி கிடையாது எனச் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரோல் அனுமதி மறுப்பு
பரோல் அனுமதி மறுப்பு
author img

By

Published : Jan 13, 2022, 7:41 PM IST

வேலூர்: கரோனா பரவல் தீவிரம் அடைந்ததை அடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு பரோல் அனுமதி மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் உள்ள கைதிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக முன்கூட்டியே கைதிகளிடம் விண்ணப்பம் பெறப்படும். கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் அவர்களுக்குப் பண்டிகை கால பரோல் வழங்கப்படும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பரோலில் செல்வதற்காக ஏராளமான கைதிகள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் கைதிகள் பரோலில் செல்ல சிறைத் துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. மேலும் வழக்கமாகச் சிறையில் நடைபெறும் பொங்கல் விழாவும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொருள்கள் மட்டுமல்ல; நீதியும் இனி ஆன்லைனில்தான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.