ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டன.

citizenship-amendment-act-islamic-state-protest

author img

By

Published : Feb 20, 2020, 2:37 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகக்கூறி, சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

கடலூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கடலூரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம்

திண்டுக்கல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தக்கூடாது என்றும், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூர் அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, இஸ்லாாமிய அமைப்புகள், உலமாக்கள், அரசியர் கட்சிகள், நெளஜவான் கமிட்டியும் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி

தேனி மாவட்ட அனைத்து ஜமாஅத் உலாக்கள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

வேலூர்

வேலூரில் இஸ்லாமியர்களின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ. ஆர்ப்பாட்டம்: முத்துநகரை மூழ்கடித்தது கடலலைகளா, மனிதத் தலைகளா...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.