வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், ஊராட்சி துறை உள்ளிட்டவையில் ரூ.73.53 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, காவல் துறை, சிறைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் சார்பில் ரூ.50.51 கோடி மதிப்பில் 13 முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தார்.
அதையடுத்து வேலூர் மாவட்டத்தில் ஐந்தாயிரத்து 865 பயனாளிகளுக்கு 77.51 லட்சம் மதிப்பிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழாயிரத்து 68 பயனாளிகளுக்கு 78.39 லட்சம் மதிப்பிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஐந்தாயிரத்து 606 பயனாளிகளுக்கு 13.58 லட்சம் மதிப்பிலும் மொத்தம் 18 ஆயிரத்து 589 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 69 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு சத்துணவு: தமிழ்நாடு அரசு அதிரடி