ETV Bharat / city

காற்று மாசால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள காத்திருக்கும் சென்னை - சி40 எச்சரிக்கை!

author img

By

Published : Sep 30, 2021, 7:53 AM IST

அனல்மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மாசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி வருவதாக C40 நகரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள (Coal-free cities: the health and economic case for a clean energy revolution) அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

C40 warns, thermal power plants, சி 40 அமைப்பு, ஆய்வு, காற்று மாசு, அனல் மின்நிலையம், C 40 cities, சி40, சி40 எச்சரிக்கை, பூவுலகின் நண்பர்கள், பூவுலகு சுந்தர்ராஜன்
சி40 எச்சரிக்கை

சென்னை: இந்தியாவில் அனல்மின் நிலைய உற்பத்தித் திறனை 64GW (ஜிகாவாட்டாக) விரிவாக்க இருக்கும் தற்போதைய திட்டங்களினால், சென்னையில் அனல்மின் நிலையங்கள் உண்டாக்கும் காற்றுமாசின் விளைவாக ஏற்படும் வருடாந்திர உயிர் இழப்புகள் தற்போதைய நிலையை விட இருமடங்காக அதிகரிக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில், தங்கள் சாராசரி ஆயுட்காலத்திற்கு குறைவாக உயிரிழப்போரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 510 ஆக இருக்கும் என சி 40 அறிக்கை கூறியுள்ளது.

பெரு நகரங்களும், அரசாங்கமும் அனல்மின் ஆற்றலுக்குப் பதிலாக புதுபிப்க்கத்தக்க ஆற்றலில்(Renewable Resources) முதலீடு செய்வது வர்த்தக ரீதியாகவும், தொழிலாளர் சுகாதாரத்திலும் நன்மை பயக்கும். ஒருவேளை புதிய அனல்மின் திட்டங்களை செயல்படுத்தப்பட்டால் உடல் நலக்குறைவால் எடுத்துக்கொள்ளப்படும் விடுப்பு நாட்கள் 2030ம் ஆண்டில் சென்னையில் மட்டும் 22 லட்ச நாட்களாக இருக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது

சென்னையில் மலிவான விலையில் மின்சாரம் விநியோகம் செய்ய வழி வகுப்பதோடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் 2020 - 2030 ஆண்டு காலகட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை மின்னுற்பத்தி, உபகரணங்களை பொருத்துதல் போன்ற துறைகளில் உருவாக்க முடியும். நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக பிற சி40 நகரங்களை விடவும் சென்னை நகர மக்களின் உடல்நலன் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

delete this text

இந்தியாவில் அனல் மின் நிலையத்தால் உற்பத்திச் செய்யப்படும் மின்உற்பத்தியில் 11 விழுக்காடு நகரங்களிருந்து 500 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளாக உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் காற்று மாசுபாடு நீண்ட தொலைவுக்கு பயணிக்கக் கூடியது என்பதால், அதன் தாக்கம் அனைவரையும் பாதிக்கும்.

குறிப்பாக விளிம்புநிலையில் இருக்கும் மக்களான இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. "சென்னையின் காற்று மாசுபாடு குறீயீடு (pm 2.5யின் வருடாந்திர அளவு) உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை விட நான்கு மடங்கும், தேசிய வழிகாட்டுதலைவிட சற்று அதிகமாகவும் உள்ளது.

தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களின் படி 2020 - 2030ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் அனல்மின் நிலையங்களை 20 விழுக்காடாக குறைக்காமல், இந்தியாவின் காலநிலை மற்றும் காற்றுத் தர இலக்குகளைப் புறந்தள்ளி 28 விழுக்காடு அதிகமாக விரிவாக்கம் செய்வது என்பது சென்னையில் நகர்ப்புற மக்களின் உடல்நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியது.

மரணங்களின் எண்ணிக்கை

மேலும், தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களினால், சென்னை நகரத்தில் அனல்மின் நிலையத்தால் உண்டாகும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் வருடாந்திர அகால மரணங்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக்கூடும்" என்கிறார் முனைவர் ரேச்சல் ஹக்ஸ்லீ, C40 அமைப்பின் அறிவுசார் மற்றும் ஆய்வு பிரிவின் தலைவர்.

அனல்மின் நிலையங்களை அதன் காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே மூடுவதற்கும், அதன் பகுதியாக மாசுபாடற்ற ஆற்றல்களில் முதலீடு செய்வது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ளவேண்டும். இதே வேளையில், புதிய அனல் மின்நிலையங்கள் கட்டப்படாமல் இருப்பதையும் காற்றின் தரம் மற்றும் காலநிலை கொள்கைளை உறுதிபடுத்தும் மைல்கல்லாக நிலை நாட்டவேண்டும்.

இந்நிலையில், C40 அமைப்பின் தற்போதைய ஆய்வு என்பது சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் விரைவில் அனல்மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து வெளியேற வேண்டியதன் அவசியத்தை தெள்ளத் தெளிவாக்கியுள்ளது.

காற்று மாசுபாட்டை குறைப்பதால் மனித உயிரைக் காக்கலாம். சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் சுற்றி வரவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் 52 ஆயிரத்து 700 பேர் சராசரி ஆயுட்காலத்தை விட முன்கூட்டியே இறக்க நேரிடும் என்றும் இதில் டெல்லி, மும்பை, பெங்களூரை காட்டிலும் சென்னையில் உயிர் இழப்புகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும். மேலும், 31 ஆயிரத்து 700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்வது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. இது நோய்களின் விகிதத்தையும், கூடுதலாக 5 ஆயிரத்து 700 குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை உண்டாக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக 6 ஆயிரத்து 820 பேர் ஆயுள் முழுதும் உடல்நலக் குறைபாட்டுடன் வாழ நேரிடும்.

பொருளாதார அடிபடையிலான பலன்கள்

காற்று மாசுபாட்டின் காரணமாக தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவு மற்றும் தொழிலாளர் விடுப்பு அதிகரிப்பதன் காரணமாக நகர்ப்புற பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படுகிறது. மேலும், காற்று மாசுபாடு பொருளாதார இழப்பிற்கும், மருத்துவ செலவு அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. இந்தியாவில், அதிக காற்று மாசுபாடு ஏற்படும் காலகட்டத்தில் தொழிலாளர் உற்பத்தித்திறன் 8-10 விழுக்காடு வரை குறையக்கூடுமென தொழில் முனைவோர்கள் கணித்துள்ளனர்.

மேலும், சி40 ஆய்வின் படி தற்போது முன்மொழியப்பட்டுள்ள அனல் மின் விரிவாக்கம் தொடருமானால் சென்னையைச் சுற்றியுள்ள அனல்மின் நிலையங்களினால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் விளைவாக ஏறத்தாழ 22 லட்சம் நாட்கள் பிணியின் காரணமாக எடுக்கும் விடுப்பு நாட்கள் ஏற்படும். சென்னையில் நிலக்கரியினால் ஏற்படும் மாசுபாட்டோடு தொடர்புடைய பொருளாதாரம், உடல் நலன் சார் செலவினங்கள் 2020-2030 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 பில்லியன் அமெரிக்கா டாலர்களாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பழைய மற்றும் அதிகம் பயன்தராத அனல் மின்நிலையங்களை மூடி, அதற்கு மாற்றாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை ஆற்றல்களில் முதலீடு செய்து சென்னைக்கு மின்சாரம் வழங்குவதின் வாயிலாக 1 லட்சத்து 40 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். காற்று மாசுபாட்டைக் குறைப்பதன் மட்டுமில்லாமல் நகர்ப்புற பகுதியில் வாழ் மக்களுக்கு குறைந்தவிலையில் மின்சாரம் வழங்கலாம்.

காலநிலை மாற்றத்தை சமாளித்தல்

இந்தியாவின் மொத்த வருடாந்திர பசுமை இல்ல(274 MT CO2ன் உமிழ்வு பாதுகாப்பு) வாயுக்களின் (Greenhouse Gases) உமிழ்வை ஆண்டுக்கு 11 விழுக்காடாக குறைக்கலாம். இது 60 மில்லியன் வாகனங்கள் ஒரு ஆண்டிற்கு சாலையில் பயணிப்பதனால் ஏற்படும் உமிழ்வுக்கு ஈடானதாகும். C40 நகரங்களின் மூத்த ஆராய்ச்சி மேலாளர் மார்க்ஸ் பேரன்சன் கூறுகையில் "இந்தியாவில் அனல்மின் விரிவாக்க திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதற்கான இலக்குகளை தீர்மானித்துக் கொண்டிருக்கையில், மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் புதிய அனல்மின் திட்டத்திற்கு நிதிகளை ஒதுக்கக்கூடாது" என்கிறார்.

"காற்று மாசுப்பாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய, ஒன்றாக அணுகப்பட வேண்டிய பிரச்னைகள் ஆகும். குறிப்பாக அதிக அளவிலான கார்பன் உமிழ்வுகள் வெளியேற முக்கிய காரணமாய் இருப்பது நிலக்கரி சார்ந்த துறைகளே. தற்போது நாம் சந்தித்து வரும் 1°C உலக வெப்ப உயர்வில் நிலக்கரி 0.3°C அளவிற்கு பங்களித்துள்ளது.

ஆனால், அரசு கொள்கைகளை வகுக்கும் பொழுது காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் தனித்தனியே கையாளப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். காற்று மாசையும், காலநிலை மாற்றத்தையும் ஒரு சேர கட்டுப்படுத்த அனல் மின் நிலையங்களை படிப்படியாக மூடுவது என்ற கொள்கை நிலைப்பாட்டை அரசுகள் எடுக்க வேண்டும்" என்கிறார் இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.