ETV Bharat / city

பீடிப் புகையால் ஏற்பட்ட தகராறு - கொலையில் முடிந்த அவலம்! - Beedi smoking ended in murder

வேலூர்: திருப்பத்தூரில் பீடி புகையால் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலையில் முடிந்த பீடி புகை
author img

By

Published : Oct 11, 2019, 5:47 PM IST

வேலூர் திருப்பத்தூரை அடுத்த கவுண்டப்பனூர் செவத்தான் வட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், அன்புராதா, கவியரசன் என இரண்டு குழந்தைகளும் உள்ளன. இவர் குடும்ப வறுமையினால் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 19 தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார் ரமேஷ்.

இந்நிலையில் கவுண்டப்பனூர் காளியம்மன் கோயிலில், மூன்று தினங்களுக்கு முன்பு கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(45) என்பவர் மது அருந்தி விட்டு கோயில் அருகில் அமர்ந்து பீடி புகைத்திருக்கிறார். இதனருகில் ரமேஷ் இருந்த நிலையில், கிருஷ்ணனைப் பார்த்து 'கோயில் அருகில் பீடிப் புகைக்காதே, வேறு இடத்திற்குச் செல்' எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் பீடியைப் புகைத்து ரமேஷின் முகத்தில் ஊதியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து, கிருஷ்ணன் தான் வைத்து இருந்த கத்தியால் ரமேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையில் முடிந்த பீடி புகை

தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த கிருஷ்ணன் கந்திலி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கொலை சம்பவத்தில் உடனிருந்த சாராய வியாபாரி அருள் என்பவரை இன்று காலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

வேட்டி சட்டையில் நரேந்திர மோடி!

Intro:திருப்பத்தூர் அருகே பீடி புகையால் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்ததுBody:

வேலூர் திருப்பத்தூர் அடுத்த கவுண்டப்பனூர் செவத்தான் வட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்( 40)வயது இவருக்கு ஜெயந்தி என்ற மணைவியும் அன்புராதா மற்றும் காவியரசன் என இரண்டு குழந்தைகள் உள்ளது இவர் குடும்ப வறுமையினால் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்
ரமேஷ் என்பவர் கடந்த 19தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார்

இந்த நிலையில் கவுண்டப்பனூர் காளியம்மன் கோயிலில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (45)என்பவர் மது அருந்தி விட்டு கோயில் அருகில் அமர்ந்து பீடி பிடித்து கொண்டுள்ளார் அருகில் ரமேஷ் இருந்த நிலையில் கிருஷ்ணனை பார்த்து பீடி கோயிலிடம் பிடிக்காதே வேறு இடத்திற்கு செல் என கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் பீடி பிடித்து ரமேஷின் முகத்தில் ஊதியுள்ளார் இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது

இரண்டு நாட்கள் கழித்து கிருஷ்ணன் என்பவர் கவுண்டப்பனூர் செவத்தான் வட்டத்தை சேர்ந்த அருள் என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார் அங்கு இரவு சென்றபோது ரமேஷின் வீடு அருகில் இருப்பதால் மீண்டும் அங்கு தகராறு ஏற்பட்டு உள்ளது இதனால் மேலும் ஆத்திரமைடந்த கிருஷ்ணன் தான் வைத்து இருந்த கத்தியால் ரமேஷ் என்பவரை சராமரியாக வெட்டி உள்ளார் இரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

தகவல் அறிந்த கந்திலி காவல்துறை போலிசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கொலை செய்த கிருஷ்ணன் கந்திலி காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் சாராய வியாபாரி அருள் என்பவரை இன்று காலை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த பீடி புகையினால் வந்த விபரீதம் கொலையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.