ETV Bharat / city

மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள்..! வணிகர் சங்கத்தினர் முற்றுகை..!

வேலூர்: வாணியம்பாடியில் உள்ள மளிகைக் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து, வணிகர் சங்கத்தினர் சிலர் கடையை முற்றுகையிட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்
author img

By

Published : Aug 15, 2019, 10:08 PM IST

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மளிகைக் கடையில், சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாகக் கூறி வணிகர் சங்கத்தினர் சிலர், தனியார் மளிகைக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் கடையின் கிடங்குக்கு சென்று பார்த்த வணிகர் சங்கத்தினர், அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்ததாகத் தெரிகிறது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்த வணிகர் சங்கத்தினர்

இதனையடுத்து, அம்மளிகைக் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வணிகர் சங்கத்தினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பின், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Intro:
வாணியம்பாடியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல்.

Body: வேலூர் மாவட்டம்

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மளிகை கடையில் சட்டவிரோதமாக தடைச்செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி வணிக சங்கத்தினர் சிலர், தனியார் மளிகை கடை முற்றுகையிட்டனர்,

பின்னர் கடையின் குடோனுக்கு சென்று பார்த்த போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Conclusion: பின்னர் அந்த மளிகை கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுப்பட முயன்ற போது காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து போராட்டத்தில் ஈடுப்பட முயன்றவர்கள் கலைந்துச்சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.