வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு (எருது விடும் விழா) நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த விழாவில் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பிறகே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எருது விடும் விழாவை காண ஏராளமனோர் வருகை தந்தனர். இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த போட்டிக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க:
எனக்கு அடித்தளம் போட்டதே என் அம்மாதான் - நெகிழும் சித் ஸ்ரீராம்