திருச்சி: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து சில தினங்களே ஆன நிலையில் நகர்ப்புற தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்ட அலுவலர்களுடன் மண்டல ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் (அக்.26) மதுரையில் ஆலோசனைக் நடைபெற்றது.
இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும், இவர்களுக்கான முறையான பயிற்சிகளும் நேற்று (அக்.27) வழங்கப்படன.
பிரதான நோக்கம்
இந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆனையர் பழனிக்குமார் பேசுகையில், "இந்த தேர்தலை சுமுகமாக, நியாமாக, எளிதாக நடத்துவது தான் இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கம். அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுத்துள்ள பணிகளை நாம் சரியாக செய்ய வேண்டும்.
ஜனவரி 21க்குள் நமக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் நாம் எப்படி சிறப்பாக நடத்தி முடிக்க போகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு காலம் குறைவாக தான் உள்ளது. எனவே எவ்வளவு சிறப்பாக, சரியாக பணிகளை முடிக்க வேண்டுமோ அதை பொறுப்புடன் செய்ய வேண்டும். தேர்தல் பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: இன்னார்தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றியது திமுக - ஸ்டாலின்