ETV Bharat / city

பிஎஃப்ஐ அலுவலகத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அதிரடி சோதனை! - பாமக பிரமுகர் ராமலிங்கம்

திருச்சி: தஞ்சை திருவிடைமருதூர் பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பிஎஃப்ஐ அலுவலகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிரடி சோதனை!
author img

By

Published : May 2, 2019, 11:47 AM IST

திருவிடைமருதூர் பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக தஞ்சையில் நேற்று சோதனை நடத்தியதில் கிடைத்த சில ஆதாரங்களின் அடிப்படையில் இன்று காலை திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பிஎஃப்ஐ) அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இதற்காக கேரளாவில் இருந்து தேசியப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று காலை திருச்சி வந்தனர். பாலக்கரை பிரதான சாலையில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகம் அமைந்துள்ள கட்டிடங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்க காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

பிஎஃப்ஐ அலுவலகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிரடி சோதனை!

கேரளாவிலிருந்து வந்த நான்கு அதிகாரிகள் காலை 9 மணி முதல் இச்சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த அமைப்பின் நிர்வாகிகள் நான்கு பேரை வரவழைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது. பிஎஃப்ஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதி இசுலாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இஸ்லாமியர்களின் வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிகளவில் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Intro:திருச்சியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.

Body:திருச்சி: திருச்சியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300 பேர் பரிதாபமாக பலியாகினர். இலங்கையில் நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிற்கும் தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்த வகையில் தமிழகத்திலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அங்கு நடந்த சோதனைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் தஞ்சையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் நேற்று சோதனையிட்டனர்.
அங்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இன்று காலை திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். இதற்காக கேரளாவில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் இன்று காலை திருச்சி வந்தனர். திருச்சி பாலக்கரை மெயின் ரோடில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அமைந்துள்ள கட்டிடங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். அந்தப் பகுதியில் உள்ள கடைகளை அடைக்க போலீசார் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். கேரளாவிலிருந்து வந்த 4 அதிகாரிகள் காலை 9 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் நிர்வாகிகள் நான்கு பேரை வரவழைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் தொடர்பான கேள்விகளையும் அதிகாரிகள் எழுப்பி வருகின்றனர். இந்த சோதனை காரணமாக பாலக்கரை பகுதியில் திடீர் பரபரப்பு நிலவுகிறது. மேலும் அந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இஸ்லாமியர்களின் வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Conclusion:தஞ்சையில் நடந்த சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திருச்சியில்
உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.