நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே புதிதாக ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மணிகண்டம் ஒன்றியம் கே.கள்ளிக்குடி ஆதாளி கருப்பு வாரச்சந்தை திடலில் உயர் கோபுர மின்விளக்கை அவர் செயல்படுத்தி வைத்தார்.
இதையடுத்து, கலையரங்கத்தில் திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மு ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த பணிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனாவை பரப்புகிறார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்