சென்னையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா(37) என்பவர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சிக்கு வந்துள்ளார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது உடலில் மறைத்து வைத்திருந்த 305 கிராம் தங்கம் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.7.48 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தங்கம் கடத்திய அவர் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.