ETV Bharat / city

திருச்சிக்கு வந்த தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் - Chennai Republic Day function

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நேற்று(பிப்.6)  திருச்சிக்கு வந்தடைந்தன.

திருச்சிக்கு வந்த தமிழ்நாடு அலங்கார ஊர்திகள்

author img

By

Published : Feb 7, 2022, 7:58 AM IST

திருச்சி: சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இரண்டு அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவை தமிழ்நாடு முழுவதும் சுற்றிவரும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று(பிப்.6) திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தலுக்காக வந்தது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மலர் தூவி பார்வையிட்டார்.

திருச்சிக்கு வந்த தமிழ்நாடு அலங்கார ஊர்திகள்

இந்த இரண்டு அலங்கார ஊர்திகள் ஒன்றில் மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகள் இருந்தன.

மற்றொரு அலங்கார ஊர்தியில், மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், சமூக சீர்திருத்தச் செயற்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.ஐயர் திருவுருவச்சிலைகள் இருந்தன.

மேலும் அதில், கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும், சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகசீலர் கக்கன், தந்தை பெரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த இரண்டு அலங்கார ஊர்திகளும் இரு நாட்கள் திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொது மக்கள் வாகனத்தின் முன்பே நின்று குடும்பத்துடன் செப்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநர் - திருமா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.