ETV Bharat / city

suriyur jallikattu: சூடுபிடிக்கும் சூரியூர் ஜல்லிக்கட்டுப் பணிகள் - சூடு பிடிக்கும் சூரியூர் ஜல்லிக்கட்டு பணிகள்

suriyur jallikattu: திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மேடைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

சூடு பிடிக்கும் சூரியூர் ஜல்லிக்கட்டு பணிகள்

author img

By

Published : Jan 10, 2022, 9:47 PM IST

suriyur jallikattu: திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான பூர்வாங்கப் பணி கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கும் தொழுவம், தடுப்பு வேலிகள், சிறப்பு விருந்தினர்கள், மேடைகள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

சூடுபிடிக்கும் சூரியூர் ஜல்லிக்கட்டுப் பணிகள்

பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மேடைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. திருச்சி சூரியூர் கிராமத்தில் வருகிற 16ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

டோக்கன் முறைப்படியும், அரசு விதிமுறைகளுக்குள்பட்டும் நடத்தப்படும் இப்போட்டியில் ஏராளமான காளைகள் பங்கேற்க உள்ளன. கரோனா தொற்று தீவிரமாக இருப்பதால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்பது குறித்து கேள்விக்குறியாகவும் உள்ளது.

இதையும் படிங்க: முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,174 நபர்கள் மீதும் ஊரடங்கை மீறி சுற்றியதாக 1,040 பேர் மீதும் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.