திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சப்பாணி - செல்வி தம்பதியினர். இவர்களுக்கு விஜய் (18) என்ற மகன் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியேவந்த விஜய், இன்று மாலை நண்பர்கள் சிலருடன் வீடு அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 6 பேர் கொண்ட கும்பல், விஜயை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்தத் தாக்குதலால் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தில்லைநகர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பகுதியில் யார் பெரிய ஆள்? என்பதில் விஜய்-க்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்களை ஆசைக்கு இணங்க வைத்து ஏமாற்றிய காசி மீது கூடுதல் வழக்கு!